Friday, July 6, 2007

வைகறையின் தியான வெளி

2007 ஜுன்24 ஞாயிறு அன்று பத்தேகால் மணிவாக்கில் ஸ்ரீ ராம் சந்த்ர மிஷன் தஞ்சாவூர் ஆஸ்ரமத்தில் காலடி வைத்தது என் வாழ்வின் திருப்புமுனை.ஏற்கனவே அங்கு அப்யாசியாக இருந்த மணிகண்டன் ப்ரெசெப்டார் முத்துச்சாமி அவர்களிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார்.முத்துச்சாமி என்னைப் பற்றிக் கேட்டார்.நான் 1989-டிசம்பரில் ஜேகே படிக்க ஆரம்பித்ததில் இருந்து 1990 ஜனவரி 19 (ஓஷோ மறைந்த தேதி) முதல் ஓஷோ படிக்க ஆரம்பித்து 1993-ல் ரமண மகரிஷியின் மானசீக சீடனாகி  ‘நான் யார்’ தியானத்தை செய்தது, 2006 ஏப்ரல் 24 முதல் ஈஷா யோகப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக அதை விடடது என்பதையும் அவரிடம் பகிர்ந்துகொண்டேன். அன்று மாலை 4 மணிக்குமேல் அவர் வீட்டுக்கு வரச்சொன்னார்.மணிகண்டன் மூலம் அடுத்த தெருவிலிருந்த அவரது வீட்டை காட்டச்சொல்லி அடையாளம் வைத்துக்கொண்டு வீடு திரும்பினேன். (தொடரும்...)